×

நீடாமங்கலத்தில் பல்நோக்கு சேவை இயக்க கூட்டம்

நீடாமங்கலம்,மே 9: நீடாமங்கலத்தில் பல்நோக்கு சேவை இயக்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் பத்ம  ராமன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நேரு, துணைத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புத்தகத் திருவிழாவை சிறப்புடன் நடத்திய மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. வரும் கல்வி ஆண்டில் மாணவர்களுக்கான தனித்திறன் போட்டிகள் நடத்துவது பற்றியும், மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும், இயக்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டது.

நீடாமங்கலம் கடைத்தெருவில் கழிவு நீர் வடிகால் கட்டுமான பணிகளை விரைவாக அமைத்திட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்புவது தொடர்பாகவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இயக்கச் செயலாளர் ஜெகதீஷ் பாபு வரவேற்றார். பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post நீடாமங்கலத்தில் பல்நோக்கு சேவை இயக்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : -Purpose Service Operating ,Needamangalam ,President ,Padma  Raman ,Dinakaran ,
× RELATED நீடாமங்கலம் வேளாண் அறிவியல்...